kalLo prAnDs!

WellcomE to My Profile..

Wednesday, November 19, 2008

Clone shot செய்வது எப்படி ?

ஒருத்தரப்போல ஒன்பதுபேர் இந்த உலகத்துல இருக்கிறாங்க என்டு சிலபேர் ரீல் விட்டு கேள்விப்பட்டிருப்பீங்க.அப்பிடி ஒன்பது பேரஇல்லீங்க இரண்டு பேரயாவது கண்டிருக்கீங்களா ? சினிமாலயே இரட்டை வேடம், மூன்று வேடம் ஏன் அன்மையில தசாவதாரமே வந்துட்டுங்க.அப்பிடி இருக்க ஏன் நம்மளயே நாங்க  இரண்டா, மூன்றா.... ஏன் பத்தா மாத்தக்கூடாது?

அதுக்கென்ன மாத்திட்டா போச்சி... J


தேவையானவை

  • Digital Camera  
  • Camera Stand
  •  Photoshop (மேலோட்டமான பரீட்சயம் போதுமானது)

படிமுறை 1

நிலையான இடத்தில் கமராவை அசையாதவண்ணம் பெருத்தவும்(Camera Stand க்கு எங்கபோறது என்டு கேக்காதீங்க, நானும் Stand  இல்லாமத்தான் எடுத்தனான்)

டிமுறை 2

உங்களது நிலையை மாற்றி மாற்றி ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களை எடுக்கவும்


(குறிப்பு : உங்களது நிலையை மட்டும் மாற்றவும்(No change in Background), உங்களது நிலைகள் கமராவின் கோணத்தில் இருந்து பார்கும்போது மேற்பொருந்தாமல்(overlap) இருப்பது உசிதம்)

படிமுறை 3

  •  எல்லாப்புகைப்படங்களையும் Photoshop ல் திறக்கவும்(வெவ்வேறு Layers ல்)
  •  Clone Stamp tool உதவியுடன் ஒரு layer ல் உள்ள உங்களது உருவத்தை மற்றய layer ல் Clone செய்யவும் 

இரண்டு படங்களையும் Layer 0, Layer 1 இல் படத்தில் காட்டியவாறு ஒன்றுடன் ஒன்று மேற்பெருந்தும் வண்ணம் திறக்கவும்

Layer 1 இன் Opacity 40% ஆக குறைக்கவும்.இப்போது நீங்கள் படத்தில் காட்டியவாறு ஒரு தோற்றப்பாட்டைக்காண முடியும்

இப்போது Layer 1 தெரிவுசெய்திருக்கும் நிலையில் Clone Stamp tool ஜ அழுத்தி பின் ஏதாவது அறியக்கூடிய x,y ஆள்கூறுகளில் Alt + Click செய்யவும்(படத்தில் காட்டியதிற்கினங்க )

பின் Layer 0 ஜ தெரிவுசெய்து அதே x,y ஆள்கூறுகளில் Click செய்து Layer 1 ல் தெரியும் விம்பம் முழுவதுமாக தீட்டவும்

இவ்வாறு முழுவதுமாக தீட்டியபின்பு நீங்கள் கீழ்கண்டவாறான படத்தைப் பெறலாம்.


சரி இனி என்ன கமராவ எடுத்திட்டு கிழம்புங்க !!! Best of Luckuuuuuu !!!

Tuesday, April 1, 2008

ஓரிரண்டு மாதம் உருண்டோடி விட்டால்..




காலை உணவு உண்ணும் போது ..
அவளுக்கும் எனக்கும் ஆறேழு கதிரை
இடைவெளி இருந்தாலும்
ஆனந்தத்தில் நிறைந்தது என் மனது.

இன்னும் ஓரிரண்டு மாதங்கள்
உருண்டோடிவிட்டால் ..
பல்கலைகழக வாழ்க்கைக்குப்
பதவி இழப்பு - அவளுக்கு
இன்னும் ஒருவருடம் மிச்சம்.

காலம் தாழ்த்தாமல் காதல்
சொல்வோம் என்று காலடி வைக்க..
விட்டில் பூச்சிக் காதலடா ,விட்டுவிடு
என்கின்றது என் சகபாடி.

இன்னும் ஒரிரண்டு மாதம்..
காலைப்பொழுது , கன்டீன் ...
சுகந்தமாக இருக்கும் என்பொழுதுகள்
பிறை

Monday, December 10, 2007

அர்த்தமற்ற வார்த்தைகள்





நான் நின்பேன் என நீ அறிந்திருந்தும் - ஏனோ


நீ நினைக்கிறாய் நான் அறியவில்லை என்று

விடைக்கு ஒரு கேள்வி சொல்வேன் -


" கேள்விக்கென்ன பதில் ? "

Thursday, March 15, 2007

காதலைப்பற்றி கவிதை எழுத..

புதிய இரவு..
அதில்,
இனிய கனவு...
புரிந்து கொண்டோம்.
இனி ஏது?
கவலை நமக்கு?

அருகில் வா!
உன் உயிரைத்தா..
கண்கள் பார்த்தோம்
காதல் வளர்த்தோம்..
அதில் காமம் எதற்கு?

உன்னில் நான் என்னில் நீ
இது உரிமை காட்டும் வார்த்தை.
மண்ணில் நீ பிறந்தது..
என் வாழ்க்கை கண்ட பாக்கியம்..

கரும்பின் இனிமை,
அது காதலில் அருமை...
என்று சில கவிஞர் சொல்லும் போதிலே...
அவர் தாய் கொண்ட
பெண்மை கண்ட பெரும்
தலைவலி அல்லவா?

அவள் கண்மணியில் கண்ட குளிர்மை
அந்த கார்மேகம் தந்ததில்லை.
அவள் கண்ணிமை கொண்ட கோணல்
அலையிடம் தோல்வி கண்டதில்லை.

காதலைப்பற்றி கவிதை எழுத..
நான் ஒன்றும் காதலிக்கத் தேவயில்லை.
கனவுகண்டு கவி வடிக்க..
எனக்கேது எல்லை.

---பிறை---

Friday, February 2, 2007

வெண் சுருட்டு

பாவி அவன்...
படுபாவி..

நானும் என் தோழிகளும்
கூடியிருந்த வேளை...
வந்தான் அவன்...
நயவஞ்சனை பூத்த புண்ணகை...
நயவஞ்சகன் அவன்...
என்னை மட்டும் உருவி இழுத்துச் சென்று...
அவன் ஆசை அனையும் வரை...
அவன் உதட்டை என் இதழுடன் வைத்து..
ஆசை அனையும் வரை...
அனுபவித்து....

பாவி
படுபாவி அவன்..

அனைந்தது அவன் ஆசை..
என்மூச்சை அனைக்க
அவன் காழுக்கடியில் என்னை கசக்கினான்...

கள்ள மனம் கொண்ட நயவஞ்சகன்...
இந்த வெண்சுருட்டின் மீது
வெள்ளைமனம் கொள்ளக்கூடாதா?
-prai-